நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா; அதிர்ச்சியில் மக்கள்!
சமீபத்தில் தங்கள் நாட்டிலிருந்து கொரோனா வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்திருந்தார். தொடர்ச்சியாக அந்த நாட்டில் 24 நாள்களாக கொரோனா தொற்று இல்லை. இதனால், லாக்டௌன் நீக்கப்பட்டு மக்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பினர்.
இந்த நிலையில், இன்று நியூசிலாந்து நாட்டில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவரும் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பியவர்கள். நியூசிலாந்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளான இருவரையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியவை ஒட்டியுள்ள சிறிய அழகான நாடான நியூசிலாந்தில் மொத்தமே 50 லட்சம் மக்கள்தான் வசிக்கின்றனர். சுத்தம், சுகாதாரத்துக்கு பெயர் போன நாடு. மக்கள் நெருக்கமில்லாத அழகிய நகரங்கள் நிறைந்துள்ள. சதுர கிலோ மீட்டருக்கு 18 பேரே வசிக்கின்றனர்.
இந்த நாட்டின் மிகப் பெரிய நகரான ஆக்லாந்தில் 16.6 லட்சம் மக்கள்தான் வசிக்கின்றனர். எனினும்,நியூசிலாந்தில் 1,156 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 22 பேர் அதில் இறந்தனர். மற்றவர்கள் அனைவரும் குணமடைந்து விட்டனர்.
Comments