நேபாளத்துடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என இந்தியா உறுதி
தன்னிச்சையாக வரைபடத்தை வெளியிட்டு நாடாளுமன்றத்தில் அதன் மசோதாவை நிறைவேற்றிய நேபாளத்துடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லாமல் போய்விட்டதாக இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நிலப்பகுதிகளை உள்ளடக்கிய சர்ச்சைக்குரிய வரைபடத்தை வெளியிட்ட நேபாளம் அதனை சட்டப்பூர்வமாக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வாக்களித்துள்ளது. இது தொடர்பாக இந்தியா நேபாள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முடிவு இப்போது நேபாளத்தின் கைகளில்தான்.
பிரதமர் ஷர்மா ஒலியும் அவருடைய அரசும் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு இனி வாய்ப்பே இல்லை என்று இந்தியா கடுமையான முடிவை எடுத்துள்ள போதும் நேபாளத்துக்கும் இந்தியாவுக்குமான நீண்ட கால நட்புறவை எந்த சக்தியாலும் தகர்த்து விட முடியாது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
Comments