சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து இன்று முதல் 100 விமானங்கள்
மும்பை விமான நிலையத்தில் இன்று முதல் 100 உள்நாட்டு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25ம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மும்பையில் நோய்த் தொற்றின் தீவிரம் காரணமாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 25 விமானங்கள் புறப்படவும்,25 விமானங்கள் தரையிறங்கவும் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று முதல் 50 கூடுதல் விமானங்களுடன் மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் செயல்பட உள்ளது. புதிதாக இயக்கப்படும் விமானங்களில் 25 விமானங்கள் டெல்லி, கொல்கத்தா, வாரணாசி, பெங்களூர், கொச்சி, ஜெய்ப்பூர், பாட்னா, ஹைதரபாத், கோரக்பூர் ஆகிய நகரங்களுக்குப் புறப்படும்.
இதன் மூலம் கடந்த மூன்று மாதங்களாக சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாதவர்களும் மும்பைக்கு செல்ல முயல்பவர்களுக்கும் இந்த தளர்வு, ஆறுதலைத் தரக்கூடியதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments