சிறப்பான நடவடிக்கைகளால் தாராவியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: மாநகராட்சி நிர்வாகம்
மும்பை குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தாராவில் 47 ஆயிரம் வீடுகளில் 7 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். ஒரே கழிவறையை 80 பேர் பயன்படுத்தும் நிலையும் இங்கு இருந்துவருகிறது. இப்பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்ததால், வீடுவீடாக பரிசோதனை நடத்தப்பட்டது. பாதிப்பு இருந்தவர்கள் தொடக்க கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு பள்ளிகள், விளையாட்டு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது பாதிக்கப்பட்ட 51 சதவீதம் பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இறப்பு விகிதம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 60-ல் இருந்து 20-ஆக குறைந்துள்ளது.
சிறப்பான நடவடிக்கைகளால் தாராவியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: மாநகராட்சி நிர்வாகம் #MumbaiDharavi #coronavirus https://t.co/JmUsS8BqiZ
— Polimer News (@polimernews) June 16, 2020
Comments