கொரோனாவால் ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒத்திவைப்பு

0 1319

2021-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா கொரோனாவால் 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவை அடுத்த ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஏப்ரல் 25க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போட்டியில் பங்கேற்கும் திரைப்படங்கள்  டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்ற கெடுவும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 80 ஆண்டுகளில் மூன்று முறை ஆஸ்கர் விழா ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments