சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைந்ததையடுத்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக அறிவிப்பு

0 3721

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைந்ததையடுத்து, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றிக் கடந்த பத்தாம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து அந்தத் தொகுதி காலியானதாகச் சட்டப்பேரவைத் தலைவர் தனபால், சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் ஆகியோர் அறிவிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் குடியாத்தம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன், திருவொற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி ஆகியோர் மறைவை அடுத்து அந்தத் தொகுதிகளும் காலியாக உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments