வட கடலோர மாவட்டங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, வட கடலோர மாவட்டங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில், கோவை, நீலகிரி, தேனி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல, நாளை வட தமிழக கடலோர மாவட் டங்கள் மற்றும் புதுவையிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.
வருகிற புதன்கிழமை முதல் 19 ஆம் தேதி வரை, மத்திய வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நாளை வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments