தெலங்கானாவில் கொரோனா சோதனை கட்டணம் ரூ 2200 ஆக குறைப்பு
ஐசிஎம்ஆரால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்கள் கொரோனா சோதனைக்கு வசூலிக்கும் கட்டணத்தை 2200 ரூபாயாக குறைத்து தெலங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதே போன்று தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்ட விகிதங்களும் குறைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசின் தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டு கட்டணம் நாளொன்றுக்கு 4000 ரூபாயாகவும், வென்டிலேட்டர் இல்லாத ஐசியூவில் 7500 ரூபாயும், வென்டிலேட்டர் உள்ள ஐசியூ வில் 9000 ரூபாயும் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நிலவரம் குறித்த மக்களின் அச்சத்தை நீக்குவதற்காக வரும் நாட்களில் ஐதராபாத் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் 50000 சோதனைகளை நடத்தவும் தெலங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.
தெலங்கானாவில் கொரோனா சோதனை கட்டணம் ரூ 2200 ஆக குறைப்பு #TelanganaCM #ChandraShekarRao #TestingFee #Coronavirus #Covid19 https://t.co/85pHTaoFHA
— Polimer News (@polimernews) June 15, 2020
Comments