மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் எனத் தகவல்

0 1748

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்துக்குத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும்பட்சத்தில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக்குழு கடந்த எட்டாம் தேதி தனது அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கியது. அந்த அறிக்கையில் 10 விழுக்காடு வரை உள் ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments