இந்தியாவை விட சீனா, பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் அதிகம்
சீனா மற்றும் பாகிஸ்தானிடம், இந்தியாவை விட அதிக எண்ணிக்கையிலான அணு ஆயுதங்கள் இருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சிக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், சீனாவிடம் 320 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 160 அணு ஆயுதங்களும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் அணு ஆயுத எண்ணிக்கை 150 என்று அந்த அறிக்கை கூறுகிறது.
சீனா தனது அணு ஆயுத சேகரத்தை குறிப்பிடத்தக்க அளவில் நவீனப்படுத்தி வருவதாக கூறும் அறிக்கை, இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் ஆணு ஆயுதங்களின் எண்ணிக்கையை மெதுவாக அதிகரித்து வருவதாகவும் கூறுகிறது.
உலகில் உள்ள மொத்த அணு ஆயுதங்களில் 90 சதவிகிதம் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments