'அண்டார்டிகா பயணம் முதல் லம்போர்கினி கார் வரை...' 50 ஆசைகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாமல் இறந்த ராஜ்புத்!

0 10042

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது 34 - வது யாரும் எதிர்பாராத வகையில் தற்கொலை செய்துகொண்டார். இந்தத் துயர சம்பவத்துக்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் அனைவரும் தங்களது வருத்தத்தையும் இரங்கலையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவருகிறார்கள். ஒவ்வொருவரும் அவருடன் ஏற்பட்ட அனுபவங்களை துயரத்துடன் பகிர்ந்து வருகிறார்கள். 

image

தற்கொலை செய்துகொண்ட  சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிகர் மட்டும் அல்ல. புத்தகங்களை வாசிப்பதிலும் அறிவியலை அறிந்துகொள்வதிலும் ஆர்வம் உடையவர். கல்லூரியில் நன்கு படித்தவர். 2003 - ல் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் 7 - வது இடத்தைப் பிடித்தது அசத்தி இருக்கிறார். அவருக்குள் நடிப்புக்கு அப்பால் நாசா கனவு, பயணம், புத்தகங்கள் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருப்பதைக் கண்டு நெகிழ்ந்து போயிருக்கிறார்கள் அவரது நண்பர்களும் ரசிகர்களும். சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம், 'தன் வாழ்வில் நிறைவேற்றியே ஆக வேண்டும்' என்று கைப்பட எழுதிய 50 கனவுகள் வரைலாகியுள்ளது. 

.



விமானங்களை இயக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், குழந்தைகளை விண்வெளி மையத்துக்கு அனுப்ப வேண்டும், சாம்பியன்களுடன் செஸ் மற்றும் டென்னிஸ் விளையாட வேண்டும். இடதுகையில் கிரிக்கெட் விளையாட வேண்டும்  என்று அவர் தனது கைப்பட எழுதிய 'To - Do List'களை வேதனையுடன் பகிர்ந்து வருகிறார்கள் அவரது நண்பர்கள்.

image

ஐரோப்பா முழுவதும் ரயிலில் பயணம் செய்ய வேண்டும். சுவாமி விவேகானந்தர் குறித்தது டாகுமெண்டரி படம் எடுக்க வேண்டும். இந்திய பாதுகாப்புப் படையில் சேர்வதற்குக் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். லம்போர்கினி காரை சொந்தமாக வாங்கவேண்டும், குழந்தைகளுக்கு நடனம் கற்றுத்தர வேண்டும். எனக்குப் பிடித்த 50 பாடல்களுக்கு கித்தார் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். கிரியா யோகா கற்றுக்கொள்ள வேண்டும். அண்டாரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும், இயங்கும் எரிமலையைப் படம் பிடிக்க வேண்டும்... என்று நீள்கிறது அந்தப் பட்டியல்.


சுஷாந்த் சிங் ராஜ்புத், தான் கைப்பட எழுதிவைத்த ஆசைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் இறந்துவிட்டார் என்றும் அவரின் நண்பர்கள் வேதனையை தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments