இந்தியா-சீனா- ரஷ்யா இடையே ஜூன் 22 முத்தரப்பு பேச்சுவார்த்தை
இந்தியா-சீனா-ரஷ்யா ஆகிய நாடுகளிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை இம்மாதம் 22ம் தேதி இணையத்தின் வழியாக நடைபெற உள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங்-யீயுடன் எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சு நடத்த உள்ளார். ஆனால் தற்போதைய சமாதானப் பேச்சுவார்த்தைக்கு மதிப்பளித்து பான்காங் பகுதியில் இந்திய ராணுவத்தினரின் ரோந்துப் பணியைத் தடுக்கும் வகையில் தடுப்பு அரண்கள் அமைத்துள்ள சீனப் படைகள் முழுவதுமாக பின்வாங்கா விட்டால் இந்த பேச்சுவார்த்தையில் ஜெய்சங்கர் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் 5 ம் தேதி முதல் அப்பகுதியில் இந்தியா-சீனா படைகளிடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது. இந்திய வெளியுறவுச் செயலர் சீனத் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்து கடும் எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சீனாவுக்கு இந்தியாவின் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
ஆயினும் வடக்கு சிக்கிம் உள்ளிட்ட சில பகுதிகளில் இந்திய-சீனப் படைகளின் மோதல் நீடித்தது. இதைத் தொடர்ந்து இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் பேச்சு நடத்தியதால் ஓரளவுக்கு சீனப்படைகள் பின்வாங்கத் தொடங்கியுள்ளன.
Comments