அமெரிக்காவில் சர்வதேச யோகா தினத்தை வீடுகளில் இருந்து கொண்டாட முடிவு

0 1614

அமெரிக்காவில் கொரோனா காரணமாக வரும் 21ந் தேதி சர்வதேச யோகா தினத்தை வீடுகளில் இருந்தவாறு கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் உள்ள தேசிய நினைவுச்சின்ன வளாகம் அல்லது நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வந்தது.

இந்த ஆண்டு கொரோனாவால் பொதுவெளியில் யோகா தினத்தை கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வாண்டு யோகா தினத்தை வீட்டில் இருந்தவாறு கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டுக்கான இந்திய தூதர் தரண்ஜீத் சிங் தெரிவித்தார்.

அன்றைய தினம் யோகா குரு பாபா ராம்தேவ் காணொலி மூலம் யோகாசனம் மற்றும் தியானப் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஹூஸ்டனில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments