நேபாள புதிய வரைபட சட்டத் திருத்த மசோதா மேலவையில் நேற்று தாக்கல்
நேபாளத்தில் இந்திய எல்லைப் பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் கோரும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் தாக்கல் செய்யப்பட்டது.
உத்தரகாண்ட் மாநில எல்லையில் உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய 3 பகுதிகளையும் இணைத்து புதிய அரசியல் நிர்வாக வரைபடத்தை நேபாள அரசு தயாரித்துள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக ஏற்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுதொடர்பான சட்டத் திருத்த மசோதா, நேபாள நாடாளுமன்ற மக்களவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நேபாள நாடாளுமன்ற மேலவை கூட்டத்தில் நேற்று இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
Comments