இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் நேபாள அரசுடன் மத்திய அரசு பேசியதாக தகவல்
நேபாள காவல்படையினரால் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, அந்நாட்டுடன் மத்திய அரசு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 12ம் தேதி பீகாரின் சீதாமர்கி பகுதியை சேர்ந்த சிலர் இந்திய எல்லையை கடந்து, நேபாளத்திற்குள் நுழைந்ததாக அந்நாட்டு காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், 3 பேர் காயமடைந்தனர். இந்திய பகுதிகளை உள்ளடக்கி நேபாளம் புதிய வரைபடத்தை வெளியிட்டதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இருநாட்டு உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
Comments