நிறவெறி மற்றும் இனவெறிக்கு எதிராக பல்வேறு நாடுகளில் தொடரும் போராட்டம் - மோதல்
அமெரிக்காவில் தொடங்கிய நிறவெறி மற்றும் இனவெறிக்கு எதிரான போராட்டம் பல்வேறு நாடுகளில் நீடித்து வரும்நிலையில், மோதல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் போலீஸ்காரர் ஒருவர் முட்டியால் கழுத்தில் அழுத்தியதில் ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பின இளைஞர் உயிரிழந்தார். இதனால் நிறவெறிக்கு எதிராக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் லண்டனில் கடந்த சில தினங்களுக்கு முன் நிறவெறியை ஆதரிக்கும் வலதுசாரி கொள்கை கொண்டவரை போராட்டக்காரர்கள் சரமாரியாகத் தாக்கினர்.
அப்போது காயமடைந்து கிடந்தவரை போராட்டத்தில் பங்கேற்ற கருப்பின இளைஞர் பாதுகாப்பாகத் தூக்கிச் சென்றார். இந்நிலையில் காயமடைந்த வெள்ளையரை காப்பாற்றிய பேட்ரிக் ஹட்சின்சன் என்பரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நிறவெறி மற்றும் இனவெறிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்றனர். அதில் ஓரினச் சேர்க்கையாளர்களும் கொடிகளை ஏந்தி பங்கேற்றனர்.
நியூஸிலாந்தின் ஆக்லாந்து மற்றும் வெல்லிங்டன் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் கருப்பின மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். அப்போது முழங்காலிட்டும் பேரணியில் முழக்கங்கள் எழுப்பியும் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
லண்டன் நகர வீதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிறவெறிக்கு எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபடி சென்றனர்.
Comments