புற்றீசல் போல் படையெடுத்து வந்த ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள்

0 5431

மத்தியப் பிரதேச தலைநகரான போபால் புறநகர்ப்பகுதிகளில் வெட்டுக்கிளிகள் ஆயிரக்கணக்கில் புற்றீசல் போல படையெடுத்துள்ளன.

இதன் ஆபத்தை அறியாமல் பலர் ஆர்வத்துடன் செல்போனில் படம்பிடித்துச் சென்றனர். அங்குள்ள பயிர்களை இந்த வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தி விடும் என்று விவசாயிகள் கவலை கொண்டுள்ளனர்.

பகலில் பறந்த படியே இருக்கும் வெட்டுக்கிளிகளைக் கொல்வது இயலாது என்பதால் இரவில் அவை மரங்களில் ஓய்வெடுக்கும்போது பூச்சிக் கொல்லி மருந்தை தெளிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.இதற்காக தீயணைப்புத் துறையினரின் உதவி நாடப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பூச்சி மருந்தை மரங்களில் தெளித்து வெட்டுக்கிளிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.வெட்டுக்கிளிகளால் இதுவரை 35 மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments