ஸ்ரீகாளஹஸ்தி கோவில் இன்று முதல் திறப்பு..!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி கோவில் இன்று முதல் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
சோதனை முறையில் முதலில் கோவில் ஊழியர்கள், செய்தியாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.இதனையடுத்து உள்ளூர் மக்கள் ஸ்வாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். புதன்கிழமை முதல் அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம் என்று தெரிவித்துள்ள கோவில்நிர்வாகம் பக்தர்களின் ஆதார் அட்டை தொலைபேசி எண் பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ராகு கேது பூஜை மட்டும் நடைபெறும் என்றும் மற்ற பூஜைகளைக் காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 8ம் தேதி முதல் ஆந்திராவின் திருப்பதி உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்ட போதும் கோவில் அர்ச்சகருக்கு கொரோனா தொற்று பரவியதால் ஸ்ரீகாளஹஸ்தி கோவில் மட்டும் மூடப்பட்டிருந்தது.
ஸ்ரீகாளஹஸ்தி கோவில் இன்று முதல் திறப்பு..! #AndhraPradesh | #SrikalahastiTemple https://t.co/9eaunmvz5x
— Polimer News (@polimernews) June 15, 2020
Comments