வனவிலங்கு வேட்டையில் இளைஞர் கைது..! இளைஞருக்கு உதவியதாக தாயும் கைது

0 3628

திருச்சியில் வனப்பகுதிகளில் சென்று விலங்குகளை வேட்டையாடி, அதனை சமைத்து சாப்பிடும் படங்களை முகநூலில் பதிவிட்டதாகக் கூறப்படும் இளைஞனையும் வேட்டைக்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருந்த அவனது தாயையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். 

பெரம்பலூர் மாவட்டம் பாடலூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் 30 வயதான கவிக்குமார் எம்.எஸ்.சி எலக்டரானிக் மீடியா மற்றும் எம்.பி.ஏ படித்துவிட்டு அதே பகுதியில் கணிணி மையம் நடத்தி வருகிறார்.

வேட்டையாடுவதில் ஆர்வமுள்ள கவிக்குமார், கடந்த சில ஆண்டுகளாக தனது நண்பர்களுடன் சேர்ந்து திருச்சி வனப்பகுதிக்கு உட்பட்ட நெடுங்கூர் காப்புக்காடு பகுதியில் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுகுறித்த ரகசிய தகவலின் பேரில் கவிக்குமாரை மடக்கிய வனத்துறையினர், அவரது கணினி மற்றும் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் அவர் காட்டுப்பன்றி, காட்டுப்பூனை முயல், மயில் என ஏராளமான வன உயிரினங்களை வேட்டைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்துள்ளன. அத்துடன் 'மெசஞ்சர்' வாயிலாக 'பாகிஸ்தான் ஹன்டிங் கிளப்'புடன் கவிக்குமார் தொடர்பில் இருந்ததும் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாடலூர் போலீஸாருடன் இணைந்து வீட்டை சோதனையிட்டதில் வேட்டைக்கு பயன்படுத்தும் ஹெட்லைட் உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மகனுக்கு வேட்டை நாய் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்து வேட்டைக்கு ஊக்கப்படுத்தியதாக அவரது தாயும் நெய்குளம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியையுமான லட்சுமியையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து இவர்கள் அளித்த தகவலின்பேரில் கொளத்தூரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரையும் கைது செய்து, அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, ஹெட்லைட் போன்றவற்றை வனத்துறையினர் மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments