ஒரே நாளில் சென்னையில் 1,415 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணி க்கை சுமார் 32 ஆயிரத்தை எட்டி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 415 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னை யின் அருகாமை மாவட்டங் களான செங்கல்பட்டில் அதிக பட்சமாக 178 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. திருவள்ளூரில் புதிதாக 81 பேரும், காஞ்சிபுரத்தில் 32 பேரும் கொரோனா வால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதவிர, திருவண்ணாமலையில் 35, ராமநாதபுரத்தில் 23, நெல்லையில் 21, மதுரை, தென்காசி மற்றும் விழுப்புரத்தில் தலா 16, சிவகங்கை - 15, கள்ளக்குறிச்சியில் 14 மற்றும் திண்டுக்கல்லில் புதிதாக 11 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. தமிழ கத்தில் கொரோனா வுக்கு இரை ஆன 435 பேரில், 347 பேர் சென்னை யைச் சேர்ந்தவர்கள்.
சுமார் 14 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் சென்னையின் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வர, இதுவரை, சுமார் 17 ஆயிரம் பேர் குணம் அடை ந்து, வீடு திரும்பி உள்ளனர்.
76 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி:
தமிழகம் முழுவதும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் ஆண் குழந்தைகள் 1162 எனவும் பெண் குழந்தைகள் 1108 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Here's the Info Graphic of Total Covid-19 positive cases in Chennai. #Covid19Chennai #GCC #Chennai #ChennaiCorporation pic.twitter.com/7pjsH0FOWt
— Greater Chennai Corporation (@chennaicorp) June 14, 2020
Comments