சீனாவில் 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அதிகரிக்கும் வைரஸ் தொற்று
இரண்டு மாதங்களுக்குப் பிறகு சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் கொரோனா வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 57 பேருக்கு புதிதாக தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த 57 பேரில் 36 பேர் பெய்ஜிங்கை சேர்ந்தவர்கள் என்றும் தொற்று ஊள்ளூர் நபர்களிடம் இருந்து பரவியதாகவும் கூறப்படுகிறது.
இவர்களையும் சேர்த்து சீனாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 83,132 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகாததால், பலி எண்ணிக்கை 4,634 ஆக நீடிக்கிறது.
Comments