அச்சம் புதிய உச்சம் கொரோனா : அதி வேக பாய்ச்சல்

0 10397

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக11 ஆயிரத்து 929 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரம், ஆறுதல் அளிக்கும் வகையில், ஒரு லட்சத்து 62 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

உலக நாடுகளை உலுக்கும் கொரோனா, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களையும் மிரட்டி வருகிறது. குறிப்பாக, மஹாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மட்டும், ஒட்டு மொத்த பாதிப்பில் 70 சதவீதம் பேர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாத தினமும் 10 ஆயிரம் வரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 11 ஆயிரத்து 929 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, ஆறுதல் அளிக்கும் வகையில், இதுவரை ஒரு லட்சத்து 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி விட்டனர்.

மஹாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 4 ஆயிரத்தை தாண்டி விட்டது.

தமிழகம், இந்த பட்டியலில் தொடர்ந்து, 2- வது இடம் வகிக்கிறது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு 39 ஆயிரத்தை நெருங்க, குஜராத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தைத் தாண்டி விட்டது.

ராஜஸ்தானில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கொரோனா வால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

உத்தரபிரதேசம், ஹரியானா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளா என பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது.

மாலை நிலவரப்படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 21 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. அதேபோல, கொரோனா உயிர்ப்பலி 9 ஆயிரத்து 200 ஆக உயர்ந்து உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments