குஜராத்தில் குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் நடமாடிய சிங்கம்
குஜராத்தில் குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் சிங்கம் சுதந்திரமாக சுற்றிதிரிந்த வீடியோ வெளியாகியுள்ளது.
அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ரஜூலா தாலுகாவில் தனியார் சிமெண்ட் நிறுவன ஊழியர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சிலர் நேற்று முன்தினம் இரவு வெளியே வந்தபோது, அங்கு கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பெரிய ஆண் சிங்கம் ஒன்று சர்வசாதாரணமாக நடந்து வந்ததும், பிறகு ஓடிச் செல்வதையும் கண்டு அவர்கள் அப்படியே உறைந்தனர். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு செல்போனில் அக்காட்சியை எடுத்து அவர்கள் சமூக இணையதளங்களில் வெளியிட அது வைரலாக பரவி வருகிறது
அந்த சிங்கம், எங்கிருந்து குடியிருப்பு பகுதிக்கு வந்தது என்பது தெரியவில்லை. இதுகுறித்த தகவலின்பேரில் சிங்கத்தை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
With increasing lion population & lions Range( From 22,000 to 30,000 sq km) the king is becoming a part of human landscape.
— Susanta Nanda (@susantananda3) June 13, 2020
King was spotted near the main colony gate of a cement factory in Amreli district Gujarat.
Time to shift them to their second home identified at MP. pic.twitter.com/RrymCIHo0k
Comments