கடைசியாக தாயுடன் தன் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த சுசாந்த் சிங்... தற்கொலைக்கு காரணம் என்ன?
இர்ஃபான்கான், ரிஷிகபூரையடுத்து பாலிவுட் மற்றோரு நடிகரை இழந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமானஅன்டோல்ட் ஸ்டோரி படத்தில் நடித்திருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தொலைக்காட்சியில் பவித்ரா ரிஷ்தா என்ற தொடரால் பிரபலமான சுசாந்த் சிங் ராஜ்புத் 2012- ம் ஆண்டு 'கை போசேய் ' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்குள் என்ட்ரி ஆனார். பிகே, கேதர்நாத் , ரபாட்டா, போன்ற சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்திருந்தார். அன்டோல்ட் ஸ்டோரி படத்தின் தோனி வேடத்தில் நடித்து அசத்தினார். கடைசியாக 2019- ம் ஆண்டு சிக்சிசோர் படத்தில் ஷாராதாக கபூருடன் நடித்தார். இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்.
பாலிவுட் நடிகை ரியா கபூருக்கும் சுஷாந்த்சிங்குக்கும் காதல் என்று கிசு கிசு பரவியிருந்தது. இந்த நிலையில் மும்பை பாந்திராவில் உள்ள அவரின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சுசாந்த்சிங் கடும் மனஅழுத்தத்தில் இருந்ததாகவும் அதற்கு சிகிச்சை எடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. சுசாந்த் சிங்கின் தற்கொலை பாலிவுட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக தன் இஸ்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வாரத்துக்கு முன்னதாக அவரின் தாயாருடன் தன் சிறுவயது புகைப்படத்தை சுசாந்த்சிங் பகிர்ந்துள்ளார். 'கலங்கலான கடந்த காலங்கள் கண்ணீரில் கரைந்திட முடிவில்லா கனவுகள் புன்னகை வரைந்திட இரண்டையும் தழுவி ஓடிடும் வாழ்க்கை ஓடம்... 'அம்மா' லவ் யூ' என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேனேஜர் திஷா சலியான், காதலருடன் இருந்த போது 14- வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். தற்போது, சுஷாந்தும் தற்கொலை செய்து கொண்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
Comments