எல்லைப் பிரச்சனையில் மத்திய அரசு எந்த தகவலையும் மறைக்காது - ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

0 1538

சீனாவுடன் ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்சனையில், எந்த தகவலையும் மறைத்து வைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

காணொலி காட்சி வாயிலாக நடத்திய ஜம்மு ஜன் சம்வாத் பொதுக்கூட்ட உரையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

எல்லைப் பிரச்சனையை தீர்க்க, சீனாவுடன் ராஜ்ய, ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாக குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், எந்த காரணத்தை கொண்டும் நாட்டின் பெருமையில் மத்திய அரசு சமரசம் செய்து கொள்ளாது என எல்லைப் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments