கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் தொடர்புகளை கண்டறிய வாட்ஸ் ஆப் குழு மூலம் கண்காணிப்பு
சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்களை வாட்ஸ் ஆப் குழு மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், நோய் பாதிப்பு உள்ளவர்களுடனான தொடர்புகளை கண்டறிவதில் சிக்கல் நீடிப்பதாக களப்பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதன் பொருட்டு ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஒரு வாட்ஸ் அப் குழு உருவாக்கி, அந்த பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினர், வீட்டு தனிமையில் உள்ளவர்களை இணைத்து விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.
மேலும் வீட்டு தனிமையில் இருப்பவர்களின் செல்போன் எண்களை சைபர் கிரைம் மூலம் கண்காணித்து, நோய் தடுப்பு வழிகாட்டுதல்களை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் தொடர்புகளை கண்டறிய வாட்ஸ் ஆப் குழு மூலம் கண்காணிப்பு | #WhatsApp | #Chennai https://t.co/AJE7UfrH27
— Polimer News (@polimernews) June 14, 2020
Comments