நைஜீரியாவிலிருந்து மும்பை வந்த விமானத்தில் நடுவழியில் பயணி மரணம்

0 3197

நைஜீரியா நாட்டின் லாகோசில் இருந்து இன்று காலை மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் 42 வயதான ஆண் பயணி நடுவழியில் உயிரிழந்தார்.

பயணத்தின் நடுவே, உடல் நடுக்கத்துடன் காணப்பட்டதாகவும், விமான ஊழியர்களிடம் தமக்கு மலேரியா இருக்கிறது என அவர் கூறியதாகவும் சக பயணிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவருக்கு விமானத்தில் உள்ள ஆக்சிஜன் குழாய்கள் பொருத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

விமானத்தில் இருந்த மருத்துவர் ஒருவர் முதலுதவி செய்தும் பலனின்றி  வாயில் ரத்தம் கசிந்த நிலையில் பயணி இறந்ததாக கூறப்படுகின்றது.

பயணி இற்கையான காரணங்களால் மரணித்து விட்டதாக கூறியுள்ள ஏர் இந்தியா நிர்வாகம், லாகோசில் உரிய மருத்துவ சோதனைக்குப் பிறகே அவர் விமானத்தில் அனுமதிக்கப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments