'நூறு நோயாளிகளுக்கு கொடுத்து, 100 சதவிகித வெற்றி!'- கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக பதஞ்சலி அறிவிப்பு

0 26067

நூறு நோயாளிகளுக்கு கொரோனா மருந்து கொடுத்து 100 சதவிகித வெற்றி கிடைத்துள்ளதாக பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுக்க ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். ரஷ்யா போன்ற நாடுகள் மருந்து கண்டுபிடிக்கப்பபட்டதாக சில நாடுகள் அறிவித்திருந்தாலும், அவை பரிசாத்திய முறையிலேயே உள்ளன. கொரோனாவுக்கு இதுவரை 100 மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அஸ்ட்ராஸெனகா,  பயோடெக் , ஜாண்சன் அண்டு ஜாண்சன் , மெர்க் , மாடெர்னா, சனோஃபி சீனாவின் கான்சைனா பயோலாஜி நிறுவனங்கள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஹரித்துவாரில் கூறுகையில்,'' கொரோனா வைரஸ் பரவியதையடுத்து எங்கள் நிறுவனம் சார்பில் தனி விஞ்ஞானிகள் குழுவை அமைத்து கொரோனாவுக்கான மருந்தை கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தோம்.

கொரோனாவின் மூலக்கூறு உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, உடலில் மென்மேலும் பரவாமல் தடுக்க கூடிய மருந்தை கண்டுபிடித்தோம். இந்த மருந்தை கொரோனா நோயாளிகள் 100 பேருக்கு கொடுத்து சோதித்து பார்த்தோம். அனைவருமே கொரோனாவில் இருந்து மீண்டு விட்டனர். அனைவரும் 5 முதல் 14 நாள்களுக்குள் குணமடைந்தனர்.இதன் மூலம் ஆயுர்வேதம் மூலம் கொரோனாவை குணப்படுத்தி விடலாம். இன்னும் ஒருவாரத்துக்குள் அதற்கான ஆதாரங்களை நாங்கள் வெளியிடுவோம்.'' என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments