டெல்லியில் கொரோனா சிகிச்சைக்காக மேலும் 5000 படுக்கைகள்
டெல்லியில் கொரோனா சிகிச்சைக்காக மேலும் 5000 படுக்கை வசதி ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசின் கொரோனா செயலியில் உள்ள விவரங்களின் அடிப்படையில் இப்போது 9802 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக உள்ளன, அவற்றில் 5367 படுக்கைகள் இன்று காலை நிலவரப்படி நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அதே நேரம் வைரஸ் தொற்று வேகமாக அதிகரிப்பதால், டெல்லியில் உள்ள அனைத்து சிறிய மற்றும் நடுத்தர மல்ட்டிஸ்பெஷாலிட்டி நர்சிங்ஹோம்கள் அனைத்தும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படுவதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இவை ஒவ்வொன்றிலும் 10 முதல் 49 படுக்கைகள் வரை இருக்கும் எனபதால் மேலும் 5000 படுக்கைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
டெல்லியில் கொரோனா சிகிச்சைக்காக மேலும் 5000 படுக்கைகள் #ArvindKejriwal #Delhi https://t.co/4QYHHEWEgs
— Polimer News (@polimernews) June 14, 2020
Comments