கொரோனா தாக்கம் குறைந்ததும் கல்லூரிகளுக்கு தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்
கொரோனா தாக்கம் குறைந்ததும் கல்லூரிகளுக்கு தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூர் அருகே சுமார் 5000 ரேசன் அட்டைதாரர்களுக்கு 5கிலோ அரிசி, பிரட், பால், முககவசம் உள்ளிட்ட பொருட்களை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பாதித்தோர் கல்லூரிகள், பள்ளிகளில் இருக்கும் மையங்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும், ஆதலால் கொரோனா குறைந்து, அந்த மையங்கள் தேவையில்லை என்ற நிலை வரும்போதே, தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்வது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
— KP Anbalagan (@KPAnbalaganoffl) June 12, 2020
கொரோனா வைரஸ் தொற்று எந்த அளவிற்கு நிவர்த்தி ஆகிறதோ, அதன் பிறகு தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களோடு கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.#Corona #TNAgainstCorona #TNGovt
Comments