8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவகாற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் தேவலா ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சென்னையை பொறுத்தவரை மாலை பொழுதில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியசாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா கடற்கரை பகுதிகள், இலட்சத்தீவு பகுதியில் சூறைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீச வாய்ப்பு இருப்பதால், மீனவர்கள் அங்கு 2 நாட்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments