ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலால் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம்

0 2000

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.

பூஞ்ச், ரஜவுரி மாவட்டங்களில் எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதி நெடுகிலும் கடந்த சில நாள்களாக பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து  தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வரும் நிலையில், பூஞ்ச் மாவட்டத்தையொட்டிய எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதி நெடுகிலும் பாகிஸ்தான் படையினர் நேற்றிரவு அத்துமீறி இயந்திர துப்பாக்கிகளாலும், சிறிய பீரங்கிகளாலும் தாக்குதல் நடத்தினர்.

இதில் 3 வீரர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு வீரர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த நிலையில், எஞ்சிய 2 வீரர்கள் சிகிச்சை பெறுகின்றனர். 

பாகிஸ்தானின் தாக்குதலில் இந்த மாதத்தில் இதுவரை 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments