பஞ்சாப் : கொரோனா பரிசோதனை அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனையை அதிகரித்து இருப்பதாக பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
மிஷன் ஃபத்தே என்ற இயக்கத்தை ஆரம்பித்திருப்பதாக கூறிய அவர் இதில் பஞ்சாபி மக்கள் கோவா ஆப்பை தங்கள் செல்போனில் தரவிறக்கம் செய்து தங்களது தினசரி உடல்நலத்தைக் குறித்து பதிவு செய்யலாம் என்று டிவிட்டரில் தெரிவித்தார்.
தினசரி தவறாமல் ஆப்பை பயன்படுத்துவோரை கொரோனாவுக்கு எதிரான வீரர்களாக அரசு அடையாளம் காணும் என்றும் அவர் கூறினார். மாநிலத்தில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தினந்தோறும் 11 ஆயிரம் பேர் வரை பரிசோதனை செய்யப்படுவதாகவும் அமரேந்தர் சிங் குறிப்பிட்டார்.
கோவிட் 19 உடன் போராடி வெல்ல பரிசோதனைகளை அதிகப்படுத்துவதே வழி என்று கூறிய அமரேந்தர் சிங், முகக் கவசம் மூலம் 75 சதவீதம் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்ற உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பை மேற்கோள் காட்டினார்.
Talking about #Covid19 testing capability in #AskCaptain, CM @capt_amarinder said that Punjab has increased the daily testing capacity to 11,000 and further steps are being taken for increasing it to 20,000 in the next 15 days. Testing is the most vital tool in fighting #Covid19. pic.twitter.com/zZFapvS3gt
— CMO Punjab (@CMOPb) June 13, 2020
Comments