நான்கு நாள்கள், 4, 384 கி.மீ, 1437 புலம் பெயர் தொழிலாளர்கள்! வேதனையிலும் சாதனை படைத்த ஷார்மிக் ரயில்

0 2928

நாட்டிலேயே நீண்டதொலைவு பயணிக்கும் ரயில் விவேக் எக்ஸ்பிரஸ் . கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த ரயில் அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகருக்கு செல்கிறது. கிட்டத்தட்ட 72 மணி நேரத்தில் 4,282 கிலோ மீட்டர் இந்த ரயில் பயணிக்கிறது. தற்போது, விவேக் எஸ்பிரஸ் ரயிலின் சாதனையை புலம் பெயர் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் ஷார்மிக் ரயில் ஒன்று முறியடித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து நாகலாந்து மாநிலம் திமாப்பூருக்கு கடந்த வியாழக்கிழமை ஷார்மிக் ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயிலில் கேரளாவிலிருந்து 966 புலம் பெயர் தொழிலாளர்கள் பயணித்தனர்.தமிழ்நாட்டில் இருந்து 274 பேர் ஏறிக்கொண்டனர். பின்னர், தெலங்கானா மாநிலம் செகந்திரபாத்துக்கு இந்த ரயில் சென்றது. அங்கும், 203 பேரை ஏற்றிக் கொண்டது. இப்படி, 8 மாநிலங்கள் வழியாக 4,322 கிலோ மீட்டர் பயணித்து சனிக்கிழமை காலை 5.30 மணியளவில் திமாப்பூர் சென்றடைந்தது.

அந்த வகையில், விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலை காட்டிலும் கூடுதலாக 40 கிலோ மீட்டர் பயணித்து நாட்டிலேயே அதிக கிலோ மீட்டர் பயணித்த ரயில் என்கிற சாதனையை இந்த ஷார்மிக் ரயில் படைத்திருக்கிறது.

கேரள மாநில அரசை நாகலாந்து மாநில அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், இந்த சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ரயிலுக்கான கட்டணமான ரூ. 17.42 லட்சத்தை ரயில்வேக்கு நாகலாந்து அரசு செலுத்தியுள்ளது. ரயிலில் பயணித்த அனைத்து தொழிலாளர்களுக்கும் தேவையான உணவு , குடிநீர் வசதிகள் சிறப்பாக செயல்பட்டிருந்தன.

ஷார்மிக் ரயில் என்றாலே வேதனை நிறைந்த காட்சிகளைத்தான் பார்க்க முடியும். வேதனையிலும் ஒரு சாதனையை படைத்துள்ளது ஒரு ஷார்மிக் ரயில்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments