சரக்கிற்கு ரூ.1 லட்சம் செலவளித்தவரிடம் .. பணம் இல்லையாம்..! கஷ்டத்தில் கருணாஸ்

0 19875

ஒரு நாள் சரக்கிற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்வதாக ஒரு காலத்தில் ஆவேசமாக முழங்கிய எம்.எல்.ஏ கருணாஸ், தற்போது தனக்கு போதிய வருமானம் இல்லாததால் தனது தொகுதி மக்களுக்கு உதவ இயலவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் மேடையில் ஏறினால் அக்னி பிழம்பாக வார்த்தைகளை கொட்டியதால் சிறைக் கதவுகளுக்குள் சென்று வந்தவர் எம்.எல்.ஏ கருணாஸ். அப்போது அவர் சரக்கிற்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவழிப்பதாக சொல்லி இருந்தார்.

இந்த நிலையில் கொரோனாவால் தமிழ் திரையுலகமே முடங்கி கிடக்கும் நிலையில் வீட்டுக்குள் இருந்த கருணாஸ், தனது திருவாடனை தொகுதியில் 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட குடிமராமத்து பணியின் தொடக்க விழாவுக்கு சென்றிருந்தார்.

தமிழகத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும் அவரவர் தொகுதி மக்களுக்கு உதவிய நிலையில், கருணாஸ் எம்.எல்.ஏ நலத்திட்ட உதவி ஏதும் வழங்காதது ஏன் சென்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், தான் சாதாரண கூத்தாடி என்றும், தனக்கு 2 ஆம் நம்பர் பிசினஸ் ஒன்றும் இல்லையென்பதால் தொகுதியில் உள்ள மக்களுக்கு உதவ இயலவில்லை என்றார்.

மேலும் தன்னால் முடிந்த உதவிகளை 15 லட்சம் ரூபாய்க்கு திரைஉலக கலைஞர்களுக்கு செய்திருப்பதாக விளக்கிய கருணாஸ், ஒருவரிடம் கடனுக்கு பணம் கேட்டிருப்பதாகவும் அந்த பணம் வந்ததும் பிக்பாஸ் நடிகையுடன் படம் நடிக்க சென்று விடுவேன் என்றும் தெரிவித்தார்.

கடைசிவரை தனது தொகுதி மக்களுக்கு உதவி ஏதும் வழங்காமல் அரசு வழங்கிய உதவிகளை மட்டுமே சுட்டிக்காட்டிவிட்டு சென்றார். நடிகர் கருணாஸ், மாதந்தோரும் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை எம்.எல்.ஏ பதவிக்கான சம்பளமாக மட்டும் பெறுவது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments