அமெரிக்கா இலவசமாக வழங்கும் 100 வென்டிலேட்டர்கள் நாளை இந்தியா வருகை
அமெரிக்கா இலவசமாக வழங்கும் வெண்டிலேட்டர்கள் திங்கள் கிழமை இந்தியா வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனாவை எதிர்த்து போராடி வரும் இந்தியாவுக்கு தேவையான வென்டிலேட்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். இதில் முதல் தவணையாக 100 வென்டிலேட்டர்களை வழங்க அவர் ஒப்புக் கொண்டிருந்தார். இந்நிலையில் சிகாகோவில் இயங்கி வரும் ஸோல் என்ற நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 100 வென்டிலேட்டர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் நாளை வருகின்றன.
வென்டிலேட்டர்கள் இந்தியாவுக்கு வந்ததும், இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் நடத்தப்படும் சிறிய நிகழ்வுக்குப் பிறகு நோயாளிகளின் பராமரிப்புக்காக மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இலவசமாக வழங்கும் 100 வென்டிலேட்டர்கள் நாளை இந்தியா வருகை #India | #America | #Ventilators | #Covid19 https://t.co/jx0XisZzr8
— Polimer News (@polimernews) June 14, 2020
Comments