சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

0 7678

கொரோனா பாதிப்பினால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 369ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் குறிப்பிட்ட ஒரு தெரு அல்லது பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொற்று உறுதியானால் அந்தப் பகுதி முழுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது. கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 360ல் இருந்து 369ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தல் 78 பகுதிகளும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 73 பகுதிகளும் திரு.வி.க.நகர் மண்டலத்தில் 53 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

நோய்த்தொற்று பரவலைத் தடுக்க கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் காலை மாலை என இரு வேளையும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணி நடைபெறுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments