இந்தியப் பகுதிகள் அடங்கிய புதிய வரைபடத்தை ஏற்கும் சட்டத் திருத்தம் நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் அளிக்கும் சட்டத் திருத்த மசோதா நேபாள நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்தியப் பகுதிகளான காலாபாணி, லிம்பியாதுரா, லிபுலேக் ஆகியவை தங்களுக்குச் சொந்தமானவை எனக் கூறி வந்த நேபாளம், அந்தப் பகுதிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
அவற்றை இந்தியா ஆக்கிரமித்திருப்பதாக நேபாளப் பிரதமர் சர்மா ஒளி தெரிவித்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் புதிய வரைபடத்துக்கு நேபாள அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.
இதற்கான சட்டத்திருத்த மசோதா மீது நேபாள நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் காரசார விவாதம் நடைபெற்றது. அதன்பின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.
Comments