மீண்டும் கொரோனா புதிய உச்சம் அதிரும் தமிழகம்

0 13091

தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக ஆயிரத்து 989 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. வரலாறு காணாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 பேர், கொரோனாவுக்கு இரை ஆகி உள்ளனர்.

தமிழகத்தில் உலுக்கும் கொரோனா, மீண்டும் புதிய உச்சத்தை எட்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 989 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

இவர்களில் வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பிய 33 பேரும் அடங்குவர். இதன் மூலம் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 700 - ஐ நெருங்கி உள்ளது.

ஒரே நாளில் அதிகபட்சமாக சுமார் 18 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அதேநேரம் கொரோனாவின் பிடியில் இருந்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் 30 பேரை கொரோனா காவு வாங்கி விட்டது. இவர்களில், சென்னையைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

இதேபோல, 27 வயது மற்றும் 29 வயது இளைஞர்கள் இருவர் உள்பட 18 பேர், அரசு மருத்துவமனைகளில் பலியாயினர். எனவே, தமிழகத்தில் கொரோனா உயிர்ப்பலி 400 - ஐ நெருங்கி உள்ளது. 

12 வயதுக்கு உட்பட்டவர்களை பொறுத்தவரை 2 ஆயிரத்திற்கு மேற்பட் டோரும், 13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 35 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில், ஆயிரத்து 832 மூதாட்டிகள் உள்பட மொத்தம் 4 ஆயிரத்து 800 க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மட்டும் ஒருவருக்கு கூட, வைரஸ் தொற்று உறுதி ஆக வில்லை என சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments