"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
சீன விண்வெளி விஞ்ஞானிகள் 3 பேருக்கு உலக விண்வெளி விருது
சீனாவின் சந்திர ஆய்வுத் திட்ட விஞ்ஞானிகள் 3 பேருக்கு, சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் மிக உயரிய உலக விண்வெளி விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சீனாவின் சங்க்-இ-4 விண்கலம், அதன் மேற்பரப்பு குறித்த பல்வேறு தகவல்களை அளித்து சந்திர ஆய்வு வரலாற்றில் புதிய மைல்கல்லை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்தின் தலைமை வடிவமைப்பாளர்கள் வு வீரென் (Wu Weiren) மற்றும் சன் செஜோ (Sun Zezhou) , துணை தலைமை வடிமைப்பாளர்கள் யூ டெங்கியுனுக்கு (Yu Dengyun) விருது வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் 70 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக சீன விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உலக விண்வெளி விருது வழங்கப்பட்டுள்ளது.
Comments