பிரேசிலில் மட்டும் ஜூன்-12 ஆம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினம்

0 1352

உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரேசிலில், ஜூன் 12 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

இதனால் அங்கு  பரிசுப் பொருட்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளை விற்கும் கடைகளில் மக்கள் வெள்ளம் அலைமோதியது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசிலில், கொரோனா அச்சம் சிறிதும் இன்றி, பிரியமானவர்களுக்குப் பிடித்தனமான பொருட்களை வாங்க,  காதலர்கள் கடைவீதிகளுக்குப் படையெடுத்தனர்.

இதையடுத்து, ஊரடங்கால் பல நாட்களாக வெறிச்சோடிய ரியோ நகர வீதிகளில், மீண்டும் வியாபாரம் களை கட்டியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments