சென்னையில் நடமாடும் மருத்துவ குழுக்கள் அடங்கிய 81 ஆம்புலன்ஸ்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

0 1155

சென்னையில் கொரோனா சிகிச்சை பணிக்காக, மேலும் 81 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நடமாடும் மருத்துவக் குழுக்களுடன் களமிறக்கப்பட்டுள்ளன.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், நடமாடும் மருத்துவ குழுக்கள் அடங்கிய 81 ஆம்புலன்ஸ் வாகனங்களை தொடங்கி வைத்து, செவிலியர்களுக்கான பணி நியமன ஆணைகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், களநடவடிக்கை, பணியாளர் எண்ணிக்கை உயர்வு என சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த பன்முக நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

கொரோன பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை முடிந்த பின்னர், நோயாளிகளின் உடல்நிலைக்கு ஏற்ப பரிசோதனை மேற்கொண்ட பின்னரே வீடுகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாக விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார்.

மண்ணிவாக்கம் மற்ற அதனை சுற்றியுள்ள பகுதியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக வரும் புகார், மாசுகட்டுப்பட்டு வாரியத்தின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என்று அவர் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments