மனிதர்களின் விண்வெளி பயணத்திட்டம் : முதன்முறையாக தலைமை தாங்கும் பெண்

0 1282

மனிதர்களின் விண்வெளி பயணத்தில் முதன்முறையாக பெண் ஒருவரை தலைமை அதிகாரியாக நாசா நியமித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு சந்திரனுக்கு மனிதனை அனுப்ப தயாராகி வரும் நிலையில், மனித விண்வெளி ஆய்வு மற்றும் செயல்பாட்டு மிஷன் இயக்குநரகத்தை வழிநடத்த கேத்தி லூடர்ஸ் என்ற பெண் அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நாசா தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் ட்விட்டரில் அறிவித்தார்.

1992 ஆம் ஆண்டு நாசாவில் சேர்ந்த கேத்தி லூடர்ஸ், கடந்த மாதம் தனியார் குழுவின் விண்வெளி பயணத்தை திறன்பட நிர்வகித்ததால் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

ஸ்பேஸ்எக்ஸ், போயிங் மற்றும் நாசாவுடன் கூட்டு சேர்ந்துள்ள பிற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ராக்கெட்டுகளை சோதனை செய்து  மனிதர்களை பாதுகாப்பாக விண்வெளிக்கு அனுப்பும் பணியை பல ஆண்டுகளாக லூடர்ஸ் மேற்கொண்டு வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments