24 மாடி கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த 72 பேருக்கு 3ம் ஆண்டு நினைவஞ்சலி
லண்டனில் 24 மாடி கட்டிட தீவிபத்தில் உயிரிழந்த 72 பேருக்கு 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
மேற்கு லண்டனில் கென்சிங்டன் மற்றும் செல்சியா பெருநகரின் வீட்டுவசதி துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் குழந்தைகள் உள்பட 72 பேர் உயிரிந்தனர்.
கட்டிடத்தை புதுப்பிக்கும் போது, வெளிப்புற சுவர்களுக்கு எரியக்கூடிய உறைபூச்சு பூசப்பட்டதே, தீ வேகமாக பரவியதற்கு காரணம் என்று கூறப்படும் நிலையில், இது குறித்த 2 ஆம் கட்ட நீதிமன்ற விசாரணை, கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கட்டிட வடிவமைப்பாளர்கள், புதுப்பித்தலை மேற்கொண்ட ஒப்பந்தக்காரர்கள், உறைப்பூச்சு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் விசாரணை வளையத்தில் உள்ளனர்.
Comments