தீவிரவாதத் தொடர்பு-கல்லூரி மாணவியிடம் விசாரணை
பாகிஸ்தானின் லஸ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவராக இருக்கலாம் கொல்கத்தா பெண்ணைத் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மேற்குவங்கத்தின் மலேயாபூர் என்னும் ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவி தானியா பர்வீன் பாகிஸ்தான் வாட்ஸ் ஆப் எண்ணை வைத்திருப்பதையும், பாகிஸ்தானில் உள்ள லஸ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினருடன் தொடர்பில் உள்ளதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
பேஸ்புக், வாட்ஸ் ஆப் ஆகிய சமூகவலைத்தளங்களின் மூலம் ராணுவ வீரர்களை வலையில் விழச் செய்து அவர்களிடம் இருந்து தகவல்களைப் பெற முயன்றதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்கு வங்கக் காவல்துறையினர் மார்ச் மாதத்தில் தான்யா பர்வீனைக் கைது செய்தனர். இந்நிலையில் வெள்ளியன்று இவரைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்த தேசியப் புலனாய்வு முகமையினர், லஸ்கர் இ தொய்பா இயக்கத்துடன் அவருக்குள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.
Comments