உத்தரப்பிரதேசத்தில் தபால் நிலையங்கள் மூலம் சானிடைசர் விற்பனை
உத்தரப்பிரதேசத்தில் தபால் நிலையங்கள் மூலம் கிருமி நாசினி விற்பனை செய்ய அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தபால்துறைத் தலைவர் கவுசலேந்திர குமார் சின்ஹா, மாநிலம் முழுவதும் 500 தபால் நிலையங்களில் கிருமி நாசினி விற்கத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்காக மேகதூத் கிராமத்யோக் என்ற அமைப்புடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வரும் 15ம் தேதி முதல் சானிடைசருடன் வேறு சில பாதுகாப்பு சாதனங்களும் விற்பனை செய்யப்பட உள்ளதாகக் கூறினார். இந்தச் சேவை ஒருவருட காலத்திற்கு தொடரும் என்றும் சின்ஹா குறிப்பிட்டார்.
Comments