10, 12ம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் வெளியாகும்-மத்திய அமைச்சர்
சிபிஎஸ் இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வுகளின் முடிவுகள் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை முதல் தேதியில் இருந்து விடுபட்ட தேர்வுகள் நடைபெற உள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்புகள் காரணமாக சில தேர்வுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தாலும் சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
விடுபட்ட அனைத்துத் தேர்வுகளும் ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகளை ஆகஸ்ட் 15ம் தேதிக்கு வெளியிட முழு அளவில் முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
10, 12ம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் வெளியாகும்-மத்திய அமைச்சர் #CBSE | #CBSEExamResult | #MinisterRameshPokhriyal https://t.co/0QFWWbvqwJ
— Polimer News (@polimernews) June 13, 2020
Comments