அமெரிக்காவில் ரயில், விமானப் பயணிகளுக்குமுகக்கவசங்களை இலவசமாக வழங்க முடிவு

0 1042

அமெரிக்காவில் ரயில் மற்றும் விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்காக 96 மில்லியன் முகக்கவசங்களை இலவசமாக வழங்க அந்நாடு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றின் 2வது அலை தற்போது அந்நாட்டில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு 87 மில்லியன் முகக்கவசங்களும், ரயில் பயணிகளுக்காக 9 மில்லியன் முகக்கவசங்களும் வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற முகக் கவசங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தொடங்குவதற்கு ஏற்ற நம்பிக்கையைக் கொடுக்கும் எனவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments