H1B விசாக்களை நிறுத்தி வைக்க அதிபர் டிரம்ப் முடிவு ?
அமெரிக்காவில் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் ஹெச் -1 பி மற்றும் எல்-1 விசாக்களை நிறுத்தி வைப்பது குறித்து அதிபர் டிரம்ப் பரிசீலனை செய்து வருகிறார்.
தொழில் திறன் மிக்க வெளிநாட்டவரை அனுமதிக்க ஹெச் 1 பி விசா அமெரிக்காவில் வழங்கப்படுகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் தீவிரம் அடைந்திருக்கும் சூழ்நிலையில், விசாக்களை நிறுத்தி வைக்க டிரம்ப் அரசு திட்டமிட்டுள்ளது.
இன்னும் இதற்கான அரசாணையில் டிரம்ப் கையெழுத்திடவில்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் அமெரிக்காவில் கோடிக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர்.
இதனால் குடியேற்ற உரிமை இல்லாத வெளிநாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் 60 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை வரும் 22ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், எச் 1 பி, எல்1, ஜே 1 உள்ளிட்ட அனைத்து விசாக்களையும் வழங்குவதை அக்டோபர் 1 முதல் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பது பற்றி டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
Comments