முதலமைச்சர்களுடன் வருகிற 16, 17 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி ஆலோசனை......

0 7398

36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன்  பிரதமர் மோடி வரும் 16ம் தேதி மற்றும் 17ம் தேதிகளில் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது ஊரடங்கு குறித்தும், கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த அபிப்ராயம் குறித்தும் அவர் கேட்டறிந்து வருகிறார்.

அதன்படி வரும் 16ம் தேதி கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதையடுத்து 17ம் தேதியன்று மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகம், பீகார், ஆந்திரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், தெலுங்கானா,ஒடிசா ஆகிய 15 முதலமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments